ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம்வந்த வரதராஜ பெருமாள் -பார்த்து உருகி நின்ற பக்தர்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு மாடவீதி புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்குள் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் முன்பு யுகாதி பண்டிகை வருட பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.