காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு திடீரென ஏற்பட்ட துர்நாற்றத்தால் சுவாசக் கோளாறு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்-பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 300க்கும் மேல் மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று மாணவிகள் பள்ளி அறைக்குள் இருந்த நிலையில் திடீரென துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் மாணவிகளுக்கு திடீரென சுவாச கோளாறு ஏற்பட்டது .
உடனடியாக பள்ளியின் ஆசிரியர்கள் அருகில் உள்ள காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் 5க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு ஐந்து மாணவிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திடீரென பள்ளி மாணவிகளுக்கு துர்நாற்றம் வீசிய நிலையில் மாணவிகளுக்கு மூச்சுத்தினரல் ஏற்பட்ட இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.