காமராஜர் பிறந்த நாள் - கண்களை கவர்ந்த லட்ச தீபாராதனை, வள்ளிக்கும்மி ஆட்டம்
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு லட்ச தீபாராதனை நடத்தப்பட்டது. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக கிடைத்திடவும் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், லட்ச தீபாராதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வள்ளிக்கும்மி ஆட்டமும், பெருஞ்சலங்கை ஆட்டமும் காண்போர் கண்களை கவரும் வகையில் இருந்தது.