காமராஜரின் 123வது பிறந்தநாள் - மாணவர்களுக்கு பரிசுகள்

Update: 2025-07-16 02:25 GMT

கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாளை யொட்டி, புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் சின்னமணி நாடார், பொது செயலாளர் தங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, சிவந்தி ஆதித்தன் பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வியில் அசத்திய முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை கவுரவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்