மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்

Update: 2025-05-27 02:08 GMT

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக சார்பில் போட்டியிட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று திமுக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒதுக்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழுக் கூட்டத்திலும், மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட நிர்வாகிகள் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்