கள்ளழகர் அழகர்கோவில் திரும்பும் நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Update: 2025-05-16 04:00 GMT

உலகப்புகழ் பெற்ற மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், விழாவின் 5ஆம் நாள் நிகழ்வாக கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து, தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், அழகர்கோவிலை நோக்கி புறப்பாடாகினார். அழகர்மலை நோக்கி செல்லும் கள்ளழகரை வழிநெடுகிலும் இருந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்