மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் கலந்து கொடுத்த அம்மா.. ஹாஸ்பிடலுக்கு கேசுவல் ஆக நடந்து வந்த காட்சி

Update: 2025-02-02 12:58 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காதல் விவகாரத்தில் மகளுக்கு உணவில் எலி பேஸ்ட் கலந்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர். புதுப்பட்டு கிராமத்தை சார்ந்த கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் சாய்குமார் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த இளம்பெண்ணின் தாயார் மல்லிகா, முட்டை பொரியலை சமைத்து அதில் எலி பேஸ்ட் கலந்து கொன்றுவிடுவேன் என மகளை மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் முட்டை பொறியலை சாப்பிட்ட இளம்பெண் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினார். உடனடியாக மாணவி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மகளை கொல்ல முயன்றதாக மல்லிகாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்