கரியில்லாத, ஆரோக்கியமான தீபம் அகர்பத்தி - 6 நறுமணங்களில் அறிமுகம் செய்த காளீஸ்வரி நிறுவனம்

Update: 2025-04-09 06:53 GMT

பிரபல சமையல் எண்ணெய் கோல்ட் வின்னர் உற்பத்தி செய்யும் காளீஸ்வரி நிறுவனம், தீபம் அகர்பத்தி என்ற பெயரில் ஊதுபத்தியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோஜா, சந்தனம், லாவண்டர் உள்ளிட்ட 6

நறுமணங்களில் தீபம் அகர்பத்தி அறிமுகம் செய்யப்பட்டது. கரியில்லாத, குறைந்த புகையுடன் கூடிய இந்த அகர்பத்திகள், நுகர்வோருக்கு ஆரோக்கியமான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் ஆன்மீகப் பொருட்களை உருவாக்கும் நோக்கில், தெய்வீகத்துறையில் நுழைவதாக, காளீஸ்வரி சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரேம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்