நாமக்கல்லில் ஜேசிபி உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக ஜேசிபி வாகனத்தின் வாடகை கட்டணம் உயர்த்தப்படுவதாக ஜேசிபி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த வரி உயர்வால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.