ரூ.200 பெட் கட்டிய ஜல்லிக்கட்டு காளை ஓனர் - அநியாயமாக பறிபோன 10th மாணவன் உயிர்

Update: 2025-03-05 10:29 GMT

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 200 ரூபாய் பணத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தீரன் பெனடிக்ட், மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைக்கு பயிற்சி அளிப்பதற்காக மாட்டின் உரிமையாளர், இந்த விஷம செயலில் ஈடுபட்டிருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவன் உயிரிழக்க காரணமான மாட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வல்லம் போலீசார், மாணவன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்