தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை

Update: 2025-02-26 03:05 GMT

தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் போராட்டம் தீவிரமடையும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். சென்னை எழிலகம் வளாகத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்