"எழுச்சியை ஏற்படுத்தும்.." - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபர பேட்டி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் யாத்திரை, தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தந்தி டி.விக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணம், தி.மு.க ஆட்சியை வீழ்த்தும் எனக் கூறினார்.