களவாணிகளான முன்னாள் IT ஊழியர்கள்-ஆஸ்திரேலியாவுக்கு பறந்த டேட்டாக்கள்-2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

Update: 2023-11-17 10:43 GMT

வங்கிகளின் தரவுகளை திருடி, கடன் செயலி நிறுவனத்திற்கு விற்பனை செய்த ஐ.டி. ஊழியர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்...

சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கிவரும் தனியார் வெப் சர்வீஸ் நிறுவனத்தில், 'கிளவுட்' தொழில்நுட்பம் மூலம் தரவுகள் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையத்தில் புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்டவர்களின் ஐபி முகவரியை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் எடிசன், ராம்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், AWS கணக்கை ஹேக் செய்து, கடன் செயலிகள் நடத்திவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுமோ ராய் என்பவருக்கு விற்பனை செய்தது அம்பலமானது.

தொடர்ந்து 7 லேப்டாப், ஒரு டேப்லெட், 4 செல்போனை பறிமுதல் செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சுமோ ராயை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்