திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நடக்கும் நாளில் உள்ளூர் விடுமுறையா?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்கான பணிகளை, அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருதமலை, பழனி உள்ளிட்டவை போல திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் தமிழில் கும்பாஷேகம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், கும்பாபிஷேகத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறையானது தேவை இருப்பின், முதல்வர் உள்ளிட்டோருடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.