தலைவெட்டி முனியப்பன் கோவிலா? புத்தர் கோவிலா? - மீண்டும் பரபரப்பு

Update: 2025-04-25 08:25 GMT

சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவில், புத்தர்கோவில் தான் என்பதை நிரூபிக்க, ஆதாரங்களுடன் மீண்டும் நீதிமன்றம் செல்ல உள்ளதாக புத்தர் அமைப்பு தெரிவித்துள்ளது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவில் புத்தர் கோவில் என்றும், இந்து சமய அறநிலையத்துறை இதில் எவ்வித உரிமையும் கோரமுடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அறநிலையத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இந்த கோவிலை, புத்தர் கோவில் என உத்தரவு பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அங்கு இருப்பது புத்தர்சிலை தான் என்பதற்கான முழு ஆதாரங்களுடன் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என, சேலம் புத்தர் அறக்கட்டளை தலைவர் ராம்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்