தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடா?

Update: 2025-05-24 05:08 GMT

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடா? - சுகாதாரத்துறை மறுப்பு

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, வீரியம் இல்லாத, கட்டுப்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நிலையில், கடந்த முறை தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், இம்முறையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசு, தென்னிந்தியாவில் பரவக்கூடிய கொரோனா தொற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்திருக்கும் நிலையில், புதிய கட்டுப்பாடு விதிக்க கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்றும்,

தற்போது வரை எந்த ஒரு புதிய கட்டுப்பாடும் தமிழக அரசு மூலம் விதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்