சென்னையில் தனியார் குழுமம் சார்பில் நடைபெற்ற விழாவில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை அம்பிகா ஆகியோருக்கு Inspiration விருது விழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய பிரேமலதா, திருமணத்திற்கு முன் விஜயகாந்திடம் போனில் பேசியபோது, அவர் தமிழில்தான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டதாக நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தற்காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் விவாகரத்து பெருகி வருவது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.