சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 முறை டாஸை இழந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இருந்து இந்தியா தொடர்ச்சியாக டாஸை இழந்து வருகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 முறை டாஸை நெதர்லாந்து அணி இழந்து இருந்தது. தற்போது இந்தியா தொடர்ச்சியாக 12 டாஸ்களை இழந்து அந்த அணியை முந்தி இருக்கிறது.