ஒரே நாளில் பவானிசாகர் அணையில் நிகழ்ந்த மாற்றம் - பார்த்து பிரமித்த மக்கள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 214 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75 புள்ளி நான்கு பூஜ்ஜியம் அடியாகவும் நீர் இருப்பு 13 புள்ளி மூன்று டி.எம்.சியாகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 800 கன அடியும் பவானி ஆற்றில் 700 கன அடி தண்ணீரும், என மொத்தம் 2 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.