தரைக்காற்று வேகம் அதிகரிப்பு - வானில் வட்டமடித்த விமானம்

Update: 2025-05-28 13:40 GMT

தரைக்காற்று வேகம் அதிகரிப்பு-வானில் வட்டமடித்த விமானம்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் தரைக்காற்றின் வேகம் அதிகரித்ததால், 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது திடீரென மீண்டும் உயர பறந்து வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம், 186 பயணிகளுடன் காலை 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. விமானம், ஓடுபாதையை நெருங்கியதும், திடீரென மின்னல் வேகத்தில் மீண்டும் மேலே பறந்து, சுமார் 3,500 அடி உயரத்தில் வானில் வட்டமடித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு விமானம் தரையிறங்கியது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தரைக்காற்றின் வேகம் அதிகரித்ததால், விமானத்தை உடனடியாக தரையிறக்க முடியவில்லை, என தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்