திமுக நகர்மன்ற உறுப்பினரை கத்தியால் வெட்டிய சம்பவம் - மூவர் நீதிமன்றத்தில் சரண்

Update: 2025-05-23 02:14 GMT

அரக்கோணத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர் உட்பட நால்வரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில், 3 பேர் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 6வது வார்டு நகர மன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் பாபு மற்றும் அவரது உறவினர்களை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கும்பல் ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அரக்கோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய அரக்கோணத்தைச் சேர்ந்த 3 பேர், நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்