"சட்ட விரோதம்.. எடுங்க அப்போ.." - நகராட்சி அதிகாரிகளிடம் துணை சேர்மன் பயங்கர வாக்குவாதம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காய்கறி சந்தையை அகற்றுமாறு நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியதைக் கண்டித்து, அதிமுக நகர்மன்ற துணைத் தலைவர் கண்ணன் வாக்குவாதம் செய்தார். அப்போது காய்கறி சந்தை சட்ட விரோதமாக இயங்கி வருவதாக நகராட்சி ஆணையாளர் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கண்ணன், யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது என நகராட்சி ஆணையர் செயல்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.