``தீபாவளிக்குள் செய்யா விட்டால்..’’ - போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு டிமாண்ட்
போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் - அரசுக்கு கோரிக்கை
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தீபாவளிக்குள் அரசு நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டம் நீடிக்கும் என்று சிஐடியு மாநில செயலாளர் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப் பலன்களை வழங்க கோரியும், சென்னை வடபழனியில் போக்குவரத்து ஊழியர்கள் 15 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த சிஐடியு மாநில செயலாளர் சௌந்தரராஜன், தங்களை போக்குவரத்து அமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நிதித் துறையிடம் பேசிவிட்டு பதில் அளிப்பதாகத் தெரிவித்ததாக கூறினார்.