ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதை கொண்டாடும் விதமாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் என்ற பெயரில் பெரும் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இலவச ரீசார்ஜ் குறித்த போலி லிங்கை ஓபன் செய்த 100க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, மூன்று லட்சத்துக்கு மேல் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் இதுபோன்ற லிங்கை தொட வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.