``யாரையும் உள்ள விட மாட்டேன்'' - பாம்புடன் சண்டை போட்டு விரட்டியடித்த நாய்

Update: 2025-07-21 02:49 GMT

சென்னை தாம்பரம் அருகே, வீட்டிற்குள் புகுந்த பாம்பை விரட்டி, வளர்ப்பு நாய் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் சிங்காரத் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் 60 வயதான உமாபதி. இவர் தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்த பாம்பை வளர்ப்பு நாய் தடுத்து அதனை விரட்டியடித்துள்ளது. சத்தம் கேட்டு எழுந்த முதியவர் உமாபதி, பாம்பு மறைவான இடத்தை நோக்கி செல்வதை பார்த்த நிலையில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை மீட்டு, பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்