``அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல'' - பூவை ஜெகன்மூர்த்தி
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லையில் கவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆணவப் படுகொலையை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், வேண்டுமென்றே தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் பூவை ஜெகன்மூர்த்தி குற்றம் சாட்டினார்.