Actor Arya | "நானும் ஒரு வீரர் தான்.. அடுத்த ஆண்டு தென் கொரியா போறேன்" - நடிகர் ஆர்யா
தானும் ஒரு தடகள வீரர் தான் என்றும், அடுத்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பேன் என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக ஆசிய மாஸ்டர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் தொடங்கியது. போட்டியின் விளம்பர தூதுவரான நடிகர் ஆர்யா விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, விளையாட்டு என்பது மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடியது என்றும், உடலை நன்றாக பராமரிப்பதில் விளையாட்டு முக்கியமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.