``இனி இப்படி இருந்தால்..மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை’’ - ஐகோர்ட்
ஜீவனாம்சம் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
“மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருந்தால், ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை“ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், இடைக்கால ஜீவனாம்சமாக மனைவிக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனைவிக்கு அதிக அளவில் சொத்துக்களும், வருமானமும் உள்ளதாகவும்... அவர் ஒரு ஸ்கேன் சென்டரை நடத்தி வருவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை எனக்கூற குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.