கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொழுதுபோக்கு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் கல்யாணம் ஆகாத ஆண், பெண் பூங்காவிற்குள் வர அனுமதியில்லை என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் பேனர் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றது. இதை தொடர்ந்து பூங்கா நிர்வாகத்தினர் பேனரை அகற்றினர்.