வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மேல் ஐகோர்ட் எடுத்த ஆக்ஷன்
வரதட்சணை புகாரை விசாரிக்காத ஆய்வாளருக்கு ரூ.10,000 அபராதம்
வரதட்சணை புகாரை விசாரிக்காத காவல் நிலைய ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. குமரியைச் சேர்ந்த உதய சந்தியா என்பவர் தாக்கல் செய்த மனுவில், வரதட்சணை கொடுமை தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் புகாரை கையாண்ட விதம் அதிருப்தியை அளிக்கிறது என கூறி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம் விதித்ததுடன், விசாரனை செய்ய நேர்மையான போலீஸ் அதிகாரியிடம் ஆவணங்களை ஒப்படைக்க மாவட்ட எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.