ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Update: 2025-09-10 11:44 GMT

ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கழிவுநீர் விவகாரத்தில் ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி,

கோவை செம்மேட்டை சேர்ந்த சிவஞானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே கோரிக்கையுடன் மனுதாரர் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில், போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த வகையில், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்