Today Rain Update | தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன் முதல் சனிக்கிழமை வரை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என மாநில எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழனன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வயநாடு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, முண்டக்கை வட்டார மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வயநாடு, பாலக்காடு, மலப்புறம், இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று கொல்லம், திருவனந்தபுரம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.