Village | School | அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராமத்தினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2025-06-20 02:36 GMT

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேன் வாங்கி தந்த கிராமத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு அருகே, பள்ளி மாணவர்களின் வசதிக்காக கிராம மக்கள் வேன் ஒன்றை வாங்கி தந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து சுமார் 250 மாணவர்கள், இப்பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில், சரியான போக்குவரத்து வசதி இல்லை. இந்த நிலையில், மூன்று கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து தனியார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, மாணவர்களின் பயன்பாட்டிற்காக 25 லட்சம் மதிப்பிலான வேன் ஒன்றை வாங்கி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்