ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

Update: 2025-07-14 06:53 GMT

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட செல்போன் கடை ஊழியரை மீட்ட போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சுமித் சிங்-கின், செல்போன் சிக்னலை வைத்து அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்புக்கு விரைந்த யானைகவுனி போலீசார்,

ஜிஎஸ்டி அதிகாரியான சுரேந்தர், வங்கி அதிகாரியான நவீன் குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் தேடி வருகின்றனர். எத்தனை நாட்களாக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதாக கடத்தப்பட்ட சுமித் சிங்கிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்