கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை... அடுத்த அதிர்ச்சி... அதிரடி கைது
அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வேதியியல் ஆய்வக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரியும் சிதம்பரநாதன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் சிதம்பரநாதனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கல்லூரி மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.