ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை மொத்தம் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை மொத்தம் 10 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....