13 பேர்.. ரூ.4.70 லட்சம்..ஹஜ் பயணம் திடீர் ரத்து - நேரில் வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-01-29 03:49 GMT

ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த முகமது ஜாஹிர் அப்பாஸ் என்பவர், 13 பேர் ஹஜ் புனித யாத்திரை செல்வதற்காக, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளார். கடந்த 24-ஆம் தேதி புறப்பட வேண்டிய பயணம் ரத்தாகியுள்ளதாக தகவல் வந்த நிலையில், சென்னைக்கு வந்து அவர் பார்த்தபோது, டிராவல்ஸ் நிறுவனம் மூடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்