Govt Bus | Viral Video | மாணவர்களை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர்

Update: 2025-10-18 06:37 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இலவச பாஸ் வைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களை அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் கீழே இறக்கிவிட்டுள்ளார். தண்டலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவேண்டிய அரசுப்பேருந்து இருநூறு மீட்டர் தள்ளி போய் நின்றுள்ளது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த அரசுப்பள்ளி மாணவர்கள் ஓடிப்போய் அரசுப்பேருந்தில் ஏறினர். இந்நிலையில் அரசுப்பேருந்தில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநர், பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டார். இலவச பாஸ் வைத்திருப்பதால் தங்களை இறக்கிவிடுகிறார்கள் என பள்ளி மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்