Krishnagiri | Illegal Liquor Case | ``கள்ளச்சந்தையில் அரசு மது விற்பனை’’ கையும் களவும் சிக்கிய கேங்
``கள்ளச்சந்தையில் அரசு மது விற்பனை’’ கையும் களவும் சிக்கிய கேங்
கள்ளச்சந்தையில் மது விற்பனை - 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த சத்யா, மணிலா, தேவிகா, பசுபதி மற்றும் பெருமாவை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் முதியவரான பெருமா மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.