Gouri Kishan | "கவுரி விவகாரம்... அதிர்ச்சியா இருக்கு.." - பிரபல நடிகை ஆவேசம்
நடிகை கவுரி கிஷனுக்கு உடனிருந்தவர்கள் கூட துணை நிற்காதது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். அதர்ஸ் திரைப்பட குழுவினரின் செய்தியாளர் சந்திப்பின் போது கவுரி கிஷன் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.