காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், தங்க பல்லி மாயமானதாகவும், அங்குள்ள தங்கம் மற்றும் வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், பொய் புகார் அளித்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது