Viral Video | Love | பேசாமல் போன காதலி.. அரிவாளோடு வீட்டில் புகுந்த காதலன்.. அதிர்ச்சிகர சிசிடிவி

பேச மறுத்த காதலி - அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன் கைது;

Update: 2025-11-05 05:21 GMT

திருப்பூரில் பேச மறுத்த காதலி வீட்டிற்குள் அரிவாளுடன் புகுந்து மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவியும், நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனதால் அவருடன் மாணவி பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி, திருப்பூரில் உள்ள மாணவி வீட்டிற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில் இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்