தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் விளையக்கூடிய தூயமல்லி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், விவசாய மக்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். சுமார் நாளரை அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த அரிசியானது பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.மேலும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அரிசியையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.