G Square | Drug Awareness | போதை ஒழிப்பு விழிப்புணர்வு - பிரசாரத்தை தொடங்கிய`ஜி ஸ்கொயர்'

Update: 2025-09-23 06:50 GMT

போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் ‘ஷார்ட் ஃபிலிம்ஸ் ஆன் வீல்ஸ்' (Short Films on Wheels) என்ற பெயரில் நடமாடும் குறும்பட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது "ஜி ஸ்கொயர்" நிறுவனம். தமிழ்நாடு முழுவதிலும், அனைத்து பகுதிகளிலும் பயணிக்கும் இந்த LED திரை கொண்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடையே நிலவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டி பயணத்தை தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், ஜி ஸ்கொயரின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமாக பால ராமஜெயம், மற்றும் கிரேஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆதிரா நேவிஸ் ஆகியோர் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த "ஜி ஸ்கொயர்" நிறுவனர் பால ராமஜெயம், செயின் ஸ்மோக்கராக இருந்த தன்னை புகைப் பழக்கத்தை விடச் செய்தது தனது மகன் தான் உருக்கமாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்