உயிரிழந்தவரின் உடலை வாகனத்தில் வைத்து தள்ளி சென்ற அவலம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை எடுத்து வந்த வாகனத்தை தள்ளி சென்று இறுதிசடங்கு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது....
திருவோனம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் சேரும் சகதியுமான சாலையில் வாகனங்கள் செல்ல இயாத நிலையே உள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஒருவரின் உடலை ஏற்றி சென்ற வாகனத்தை தள்ளி சென்றுள்ளனர். இங்கு இறுதிசடங்குக்காக செல்லும் பாதையை சீரமைக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.