முப்படைகள் கையில் முழு பவர்.. கண் அசைத்த மோடி

Update: 2025-04-30 03:28 GMT

பயங்கரவாத தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அணில் செளகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடியும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்