கலெக்டர் முன் தர்ணா | தரையில் உருண்டு அழுத பெண்களால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு
பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த முத்தம்மாள் என்ற மூதாட்டியும், அவரது மகள் வனஜா என்ற பெண்ணும் தங்களது உறவினர் வெங்கடேசன் என்பவர் தங்களுக்கே தெரியாமல் தங்களது நிலத்தை பட்டா மாற்றி விட்டதாக கண்ணீர் மல்க அழுது புலம்பினர். இது குறித்து கேட்டால், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய இருவரும், தங்களது நிலத்தை மீட்கக் கோரி தரையில் உருண்டு அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அதிகாரிகள் இருவரையும் சமூக நலத்துறை வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.