கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2025-05-21 09:12 GMT

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் காற்றில் பறந்து செல்கின்றன. அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், வினாடிக்கு ஆயிரத்து 410 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, தட்டனப்பள்ளி உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்