டெல்லியில் மீன்களுக்கு உணவளிக்க சென்ற பாஜக நிர்வாகி ஆற்றில் கால் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
குல்தீப் நயின்வால் என்ற பாஜக நிர்வாகி செள்ஹான்பட்டி பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் மீன்களுக்கு உணவு அளிப்பதற்காக இறங்கினார். அந்தப் பகுதி சேறும் சகதியுமாக இருந்ததால் அவரது கால் வழுக்கி ஆற்றினுள் விழுந்து நீரில் மூழ்கினார்... தீயணைப்புத் துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் நீண்ட நேரமாக போராடிய நிலையில், இறுதியில் சடலமாக மீட்கப்பட்டார்