Vellore | வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. தீயணைப்பு வீரரால் தப்பிய உயிர்
வேலூர் சத்துவாச்சாரி நேருநகரில் தனியாக வசித்து வரும் சரசு என்ற பெண் சமைக்கும் போது சிலிண்டரில் தீ பற்றிய நிலையில், அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த செயல் பாராட்டை பெற்றுள்ளது. உறவினர் வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் தமிழரசன் சிலிண்டரில் தீப்பற்றிய உடனே, அருகே இருந்த மருத்துவமனையிலிருந்த தீயணைப்பானை கொண்டு வந்து தீயை அணைத்து, தண்ணீரால் நனைக்கப்பட்ட கோணிப்பையை போட்டு சிலிண்டரை மூடி தீ விபத்தை தடுத்துள்ளார்.